ராதாரவி டப்பிங் சங்கத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஊழல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ராதாரவி இவர் சமீபத்தில் டப்பிங் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தார். அப்போது அவர் டப்பிங் சங்கத்தில் பல்வேறு ஊழல் செய்ததாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டப்பிங் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளான மயிலை எஸ் குமார், சிஜி மற்றும் மறைந்த காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அழைத்திருந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் 47 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் டப்பிங் சங்கம் கட்டுவதற்கு நிலம் வாங்கியது தொடர்பாக பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் எதற்கும் முறையான பத்திரப்பதிவு இல்லை எனவும் அதோடு கட்டிடம் கட்டுவதிலும் ஏகப்பட்ட ஊழல்களை அரங்கேற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொகை கோடிக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதோடு குற்றம் நிரூபிக்கப்படும் ஆனால் ராதாரவியின் டப்பிங் சங்கம் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு மனுதாரர்களுக்கு தொழிலாளர் நலச் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.