Categories
தேசிய செய்திகள்

OMG: டமால்னு கேட்ட சத்தம்… கடை உரிமையாளர் மீது பாய்ந்த குண்டு…. செய்வதறியாது திணறிய போலீஸ்…. பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரிலுள்ள மொபைல் கடைக்கு காவலர் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு மொபைல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, தன் பிஸ்டல் கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த கவுன்டரில் அவர் வைக்க முற்பட்டார். அப்போது அவரை அறியாமல் துப்பாக்கியால் சுட்ட நிலையில், எதிரேயிருந்த அந்த கடை உரிமையாளர் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து கடும் காயமடைந்த அந்த கடை உரிமையாளர் உடனே மருத்துவமைனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இக்காட்சிகள் அனைத்தும் அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன்பின் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியுள்ளதாகவும் அம்ரித்சர் வடக்கு துணை காவல்கண்காணிப்பாளர் வரிந்தர் சிங் தெரிவித்து இருக்கிறார். தற்போது காயமடைந்த இளைஞர் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தையும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தையும் வைத்து காவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |