Categories
தேசிய செய்திகள்

OMG: டாஸ்மார்க் மீது கல் எறிந்த முன்னாள் எம்.பி…. வைரலாகும் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் உள்ள மது கடைகளை மூட வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவர் உமா பாரதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

மத்திய பிரதேச மாநிலதின் போபாலின் தலைநகரில் உள்ள பர்கேரா பதானி பகுதியில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் மதுக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியுமான உமா பாரதி இந்த மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால் நேற்று உமா பாரதி தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுக் கடைகளை தாக்கியுள்ளனர். மேலும் உமா பாரதியும் மதுக் கடைகள் மீது கல் எரிவது போன்ற வீடியோவை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனுடன் பள்ளிக்கூடங்கள், கோயில்கள் இருப்பதால் அப்பகுதியில் மதுக்கடைகளை மூடு மாறு விடுத்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகிகள் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உமாபாரதியின்  இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

Categories

Tech |