உலக நாடுகளுக்கு கொரோனா, உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் உள்ளிட்ட வைரஸ்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் பொருளாதாரமும் சீர்குலையும், அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று ஐநா பொதுச் செயலாளர் குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே நாட்டில் ஒருவர் தடுப்பூசி போட தவறினால் கூட புதிய மாறுபாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது கொரோனா மீண்டும் மாறுபாடு அடையும் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 70 சதவீதம் பேருக்கும், ஆண்டின் இறுதியில் 40% பேருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு இலக்கை நிர்ணயித்தது.
ஆனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை என்று குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். எனவே வளரும் நாடுகளுடன் தொழில்நுட்ப பகிர்வின் மூலம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அப்போது தான் கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான ஒரு வழியை கண்டறிய இயலும் என்று கூறியுள்ளார்.