தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும், ஸ்க்ரப் டைபல் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதேபோல டெங்குவால் 4806, சிக்கன் குனியாவால் 140 பேர் மற்றும் மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நோய் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.