தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 55,682பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவல் நேற்று வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 55,683 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்துக்களில் 15,384 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 55,996 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள் பலர் கார், பைக்கில் சாகசம் செய்யும் போது ஏற்படும் விபத்துக்களே உயிரிழப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அதிவேகப் பயணம் உயிரை பறிக்கும் உள்ளிட்ட வாசகங்கள் ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் போதும் இளைஞர்கள் சிலர் அதி வேகமாக செல்வதால் பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்கின்றன.