Categories
மாநில செய்திகள்

OMG: தமிழக காவல்துறை லஞ்ச பட்டியல்…. இத்தனை வகையா? வெளியான ரகசிய தகவல்….!!!

தமிழக காவல் துறையில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையங்களில் அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் காவல் நிலைய எழுத்தர், காவல் உதவி ஆய்வாளர், ஆய்வாளர், தனிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆகிய ஐந்து நிலைகளில் 61 வகைகளில் லஞ்சம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த சுற்றறிக்கை இலஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் லஞ்சம் வாங்குவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் மற்றும் பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் காவல் துறையில் லஞ்சம் தடுக்க முடியாத பிரச்சனையாகவே இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் உளவுத்துறை கடந்த மாதம் ரகசிய ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் ஐந்து நிலைகளில் அறுபத்தி ஒரு வகைகளுக்கு லஞ்சம் வாங்குவது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தப்பட வில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சில அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |