Categories
மாநில செய்திகள்

OMG: தமிழக மக்களே இப்படி செய்யாதீங்க…. இது உங்களுக்கு தான் ஆபத்து….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதல் நாளில் 75 ஆயிரம் பேர் மட்டுமே குழந்தை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 2 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நிலையில் 75 ஆயிரம் பேர் மட்டுமே போட்டுக் கொண்டனர். கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Categories

Tech |