பெண்ணை சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாரா கிராமத்தில் பங்கஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பங்கஜ்ஜிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பங்கஜ் அந்த பெண்ணை கீழே தள்ளி தனது காலால் முகம், கழுத்து ஆகிய பகுதியில் சரமாரியாக உதைத்துள்ளார். இதில் படுகாயம் அந்த பெண் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பங்கஜ்ஜை கைது செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளியுள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.