Categories
தேசிய செய்திகள்

OMG: “திறக்க முடியாத ஆம்புலன்ஸ் கதவு”… நோயாளியின் உயிர் போன பரிதாபம்…!!!!!

ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாமல் சிகிச்சைக்கு காலதாமதமானதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனர். இதனை அடுத்து கோயமோனை ஆம்புலன்ஸில் ஏற்ற முயற்சி செய்தபோது ஆம்புலன்ஸின் கதவை திறக்க முடியாமல் போனது. இதனை அடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை உடைத்து திறந்து இருக்கின்றனர். அதன் பின் கோயமோன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சிகிச்சைக்கு காலதாமதம் ஆனதால் உயர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |