Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: தூக்கு மாட்டுவது எப்படி?…. சிறுவனின் விளையாட்டு விபரீதமான சோகம்….!!!!!

சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் என்ற பகுதியில் கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திக் அவரின் சகோதரனும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தூக்கு மாட்டுவது எப்படி என அண்ணன் தம்பி இருவரும் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த நிலையில் கார்த்திக் படுக்கை அறையில் உள்ள மெத்தை மீது நாற்காலி ஒன்றை போட்டு மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டும்போது கால் தவறி கீழே விழுந்ததில் கழுத்தில் மாட்டிய தூக்கு இறுகி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |