பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் ஆன ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. மேலும் தற்கொலை கடிதம் குறிப்புகள் எதுவும் சிக்கவில்லை.
ஆனால் சில நாட்களாகவே அந்த இல்லத்தில் தான் அவர் வசித்து வந்துள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.