பிரபல நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏராளமானோர் தொழுகை செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு திடீரென நுழைந்த சிலர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.