பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மறுபிரவேச திரைப்படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் போன்றோர் நடித்து இருக்கின்றனர். இதேபோன்று ராஜ்குமார் ஹிரானியின் பன்கி திரைப்படம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி நடிக்கிறார். இத்திரைபடம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்ற வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் பற்றி அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சென்றசில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.