பெங்களூருவை சேர்ந்தவர் ரச்சனா(39) என்பவர் சினிமா படங்களில் துணை நடிகையாக வலம் வந்த ஆவார். இவர் RJ-ஆகவும் இருந்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான “சிம்பிள் ஆகி ஒன் லவ் ஸ்டோரி” என்ற கன்னட படத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டியின் தங்கையாகவும் நடித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை (பிப்..22) ரச்சனா தனது வீட்டில் இருந்தபோது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனால் நடிகை ரச்சனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது