Categories
தேசிய செய்திகள்

OMG: நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனம் ஆடிய மகன் திடீர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் தந்தையும் மரணம்… நடந்தது என்ன…?

நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்ப்பா நடனமாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கர்பா நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. க்ளோபல் சிட்டி வளாகத்தில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் மனிஷ் நராஜ் சோனிக்ரா (35) என்பவரும் அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (66) என்பவரும் நடனமாடியுள்ளனர். இந்த நிலையில் மணீஷ் நராப்ஜி நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிய தந்தை உடனடியாக மகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்பின் அவர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |