கருங்கடலில் உள்ள உக்ரேனின் பாம்பு தீவில் இருந்த 13 ராணுவ வீரர்கள் மீது ரஷ்ய போர்க் கப்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் அனைவரும் வீரமரணமடைந்துள்ளார்கள்.
உக்ரேனில் ரஷ்ய படைகள் 3 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் மீது கடல், தரை, வான் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரேனும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யப் படைகள் உக்ரேனின் தலைநகரான கீவ் நகரத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு இருக்க கருங்கடலிலுள்ள உக்ரேனின் பாம்பு தீவில் அந்நாட்டின் 13 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்கள்.
அப்போது அங்கு வந்த ரஷ்ய போர் கப்பலின் கேப்டன் அவர்களை ஆயுதங்களைத் துறந்து சரணடையுமாறு கேட்டுள்ளார். ஆனால் உக்ரைன் வீரர்களின் தளபதி ரஷ்ய போர்க் கப்பல் மற்றும் படைவீரர்கள் குறித்து கெட்ட வார்த்தையில் திட்டி சரணடைய மறுத்துள்ளார். அதன்பின்பு ரஷ்ய போர்க் கப்பல் பாம்பு தீவில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேரும் வீரமரணமடைந்துள்ளார்கள்.