Categories
தேசிய செய்திகள்

OMG..! நாடு முழுவதும்…. 638 போலீஸ் ஸ்டேஷன்களில்…. தொலைபேசி வசதி இல்லையாம்…!!!

நாடு முழுவதும் 638 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதிகள் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா தலைமை வகித்துள்ளார். அதில் சில முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் கடந்த 2020-ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த நாட்டிலும் முழுவதும் 16,833 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அதில் 257 போலீஸ் ஸ்டேஷன்களில் வாகனங்களே இல்லை. மேலும் 638 போலீஸ் ஸ்டேஷன்களில் தொலைபேசி வசதிகள் இல்லை. அதைத்தொடர்ந்து 143 போலீஸ் ஸ்டேஷன்களில் ஒயர்லெஸ் அல்லது மொபைல் போன் வசதிகளே இல்லை.

மேலும் கணிசமான மாநிலங்களில் காஷ்மீர் போன்ற எல்லைப் புற மாநிலங்களில் கூட போலீஸ் ஸ்டேஷன்களில் தொலைபேசி ஒயர்லெஸ் வசதிகள் இல்லை. இந்த மாதிரியான வசதிகளை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |