கேரள மாநிலத்தில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து ஷோர்னூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அதாவது ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் இரவு 10.30 மணி அளவில் அந்த சரக்கு ரயிலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகன்கள் தடம் புரண்டது.
இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு ரயில் நிலையங்களிலும் சில ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர், தமிழகத்திலிருந்து புறப்பட்ட அந்த சரக்கு ரயில் ஆலுவா மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களில் சிமெண்ட்-ஐ இறக்குவதற்காக சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.