சிறுவன் மீது வாகனம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு இதய நோயாளியை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த சிறுவன் மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதே பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் சிறுவனை ஆம்புலன்ஸ் தூக்கி வீசும் காட்சி பார்ப்போர் நெஞ்சை பதற வைத்து இருக்கிறது.