Categories
உலக செய்திகள்

OMG: நோயுடன் போராடும் ஜாம்பவான் பீலே…. மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தினர்…. ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கால்பந்து ஜாம்பவான் பீலே  ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர்  மருத்துவமனைக்கு சென்று  கிறிஸ்துமஸ் பண்டிகையை பீலே உடன் சேர்ந்து   கொண்டாடினர். இதனையடுத்து படுத்த நிலையில் உள்ள தனது தந்தையை மார்போடு அணைத்தபடி அவரது மகள்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |