கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவாடியக்காடு கிராமத்தில் மீனவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சேகர் அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் படகு மேல கடைசித் தீவு பகுதியில் படகு நின்றுள்ளது. இந்நிலையில் சேகர் படகில் நின்றவாறு கடலில் வளையை வீசியுள்ளார்.
அப்போது திடீரென சேகர் நிலைத்தடுமாறி கடலில் விழுந்து நீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்து சேகரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு சேகரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.