கர்நாடகாவில் உள்ள மைசூரு மாவட்டத்தில் தன் பள்ளியில் பயிலும் மாணவிக்கு முத்தம் கொடுத்து துன்புறுத்தியதற்காக தலைமை ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பல தரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்து வந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.