Categories
தேசிய செய்திகள்

OMG: பிப்ரவரி 1 முதல் 15-க்குள் உச்சமடையும்…. சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையும் என்று சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதை குறிக்கும் ஆர்- நாட் மதிப்பு 4 என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த சோதனை மதிப்பு 2.9 என்ற விகிதத்தில் இருந்தது.

ஆனால் ஜனவரி 1 முதல் 6ம் தேதி வரை அந்த மதிப்பு 4 என்ற அளவில் உயர்ந்து விட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைத்தல், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அதிகப்படுத்தும் போது மக்கள் ஒருவரோடு ஒருவர் சந்திப்பது குறையும் என்றும் அப்போது ஆர்- நாட் மதிப்பு குறைய தொடங்கும் என்றும் சென்னை ஐஐடி கணிதத்துறையின் உதவிப்பேராசிரியர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |