கேரள திரையுலகில் பிரபல இசை அமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1956 ஆம் ஆண்டு எளிமையான இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே இசை பயின்ற மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே திரைப்படத் துறையில் நுழைந்து தனது திறமையால் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார். அவர் பல்வேறு பாடல்களை இயக்கியுள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு பயாஸ்கோப் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான கேரள மாநில விருதை பெற்றார். இவரது மறைவிற்கு திரை உலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories