பெங்களூருவில் பிரபல இளம் கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் வர்ஜாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அதனால் அந்த தற்கொலை சம்பவதிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.