குத்துச்சண்டை வீரரான மூசா யாமக் துருக்கியில் பிறந்து ஜெர்மனியில் குடிபெயர்ந்தவர். இவர் ஆசிய அளவிலான போட்டிகளில் விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். இந்நிலையில் முனிச் நகரில் உகாண்டா வீரர் ஹம்சா வாண்டராவிற்கு எதிரான போட்டியில் விளையாடியபோது 2-வது சுற்றில் சராமரியாக தாக்கப்பட்டார். இதனை அடுத்து மூன்றாவது சுற்று ஆரம்பிக்கும்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குத்துச்சண்டை வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.