Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!!

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை, பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற போது, அவருடன் சென்ற பாதுகாவலரிடம் மர்மநபர் ஒருவர் கடிதம் ஒன்றை கொடுத்து விட்டு தலைமறைவானார்.

இந்த கடிதத்தை அவர் சலீம்கானிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் அவருக்கும் நடிகர் சல்மான்கானிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கடிதத்துடன் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வந்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டல் தொடர்பாக நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஐஐஎஃப்ஏ நிகழ்ச்சிக்காக அபுதாபி சென்றிருந்த சல்மான்கான் நேற்று தான் மும்பை திரும்பினார். அதற்குள் கொலை மிரட்டல் கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |