Categories
சினிமா

OMG: பிரபல நடிகர் சலீம் கவுஸ் மறைவு…. சோகத்தில் உறைந்த ரசிகர்கள்…..!!!!!

விஜயகாந்த், விஜய் என்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சலீம் கவுஸ். இவர் திருடா திருடா, வெற்றி விழா, சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். தமிழ் திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட் படங்களான ஸ்வர்க் நரக், மந்தன், கலியுக், சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ, திரிகல், அகாத், த்ரோஹி, சர்தாரி பேகம், கொய்லா, சிப்பாய் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் அவ்வப்போது நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அத்துடன் இவர் ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் ஆகிய வேடங்களில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். சென்னையில் பிறந்த இவர் மும்பையில் வசித்துவந்தார். தற்போது 70 வயதான நிலையில் அவர் உடல்நலக்குறைவால் காலமானார். ரசிகர்களின் பாராட்டை பெற்ற சலீம்கவுஸின் இறப்பு திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியாகிய வேட்டைக்காரன் திரைப்படத்தில் சலீம் கவுஸ் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |