கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல மராத்தி நடிகர் இன்று காலமானார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மராத்தி நடிகர் விராசாதிதர் காலமானார். அவரது மறைவு இந்திய சினிமாவுக்கு பெரிய இழப்பாகும். மராத்தியில் 2014 ஆம் ஆண்டு வெளியான கோர்ட் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவரின் நடிப்பைப் பார்த்து தான் 2015ஆம் ஆண்டு கோர்ட்டு திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு மத்திய அரசு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.