பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத்(43) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நிவின்பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதை எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories