பிரபல நாட்டில் கப்பல் மூழ்கிய விபத்தில் மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நாடான தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போர்க்கப்பல் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இருந்துள்ளனர். அப்போது திடீரென கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 75 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து கடலுக்குள் மூழ்கிய மாலுமிகளை 3 போர்க்கப்பல் மற்றும் 2 ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு மாலுமி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அதே இடத்தில் மேலும் சில மாலுமிகள் இருக்கலாம் என கருதிய குழுவினர் அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அப்போது 6 மாலுமிகள் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 23 மாலூமிகளை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.