பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் அங்கு இருந்த பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் உயிர் பயத்தில் அலறியடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தவில்லை. தங்களின் கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருயை சுடுவது போல் சுட்டுத்தள்ளினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றொரு பயங்கரவாதி போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 40 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் வழிபாட்டுத்தளத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.