Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “சடலத்தை பார்க்க பிணவறைக்கு சென்ற doctor”…. காத்திருந்த பேரதிர்ச்சி ….!!!!!

பிரபல நாட்டில் ஒரு நபரை உயிரிழந்ததாக கூறி உயிருடன் பிணவறையில்  வைத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் kevin Reid என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி  கடந்த 5-ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இறந்ததை செவிலியர்கள் தான் உறுதி செய்துள்ளனர்.மேலும் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இறப்பு சான்றிதலுக்காக இவர் இறந்ததை ஒரு மருத்துவர் உறுதி செய்ய வேண்டும் என்பதால், 6-ஆம்  தேதி மருத்துவர் ஒருவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதனையடுத்து  அவர்  kavin  உடைய உடலை பரிசோதித்துள்ளார்.

அப்போது பைக்குள்  வைக்கப்பட்டிருந்த kevin உடைய  கண்கள் திறந்து இருப்பதையும், அவரது கையில் ரத்தம் கொட்டி இருப்பதையும், இடது கையை தனது வலது கையின் மீது வைத்திருப்பதையும் அந்த மருத்துவர் கண்டுள்ளார்.அதாவது பைக்குள் வைக்கப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்ட kevin உயிருடன் இருந்திருக்கலாம் என்றும், உயிருடனேயே  அவரை பிணவறையில்  வைத்திருப்பது தெரிய வந்தது.

ஆனால் செவிலியர்கள் kevin கடந்த 5-ஆம்  தேதி உயிரிழந்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அதை மறுத்து அவர் 6-ஆம்  தேதி உயிரிழந்ததாக சான்றிதழ் கொடுக்குமாறு அந்த மருத்துவரை மருத்துவமனை ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால்  அந்த மருத்துவர் மறுத்துள்ளார். இந்நிலையில் kevin உடைய இறுதிச்சடங்குக்காக அவரது உடலை அவரது உறவினர்கள் இறுதிச் சடங்கு மையத்திற்கு கொண்டு செல்ல அவர் எப்போது இறந்தார் என இறுதி சடங்கு மைய ஊழியர்களிடம் கேட்டபோது அவர் 5-ஆம்  தேதி இறந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்

ஆனால் மருத்துவமனை கொடுத்த இறப்பு சான்றிதழில் அவர் 6-ஆம்  தேதி இறந்ததாக குறிப்பிடப்பட்டு இருப்பதை கண்ட ஊழியர்களால் இந்தப் பிரச்சனை வெளியே தெரிந்திருக்கிறது. அதாவது அந்த இறப்பு சான்றிதழில் மருத்துவமனை ஊழியர்கள் தேதியை மாற்றியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளதால் kevin மரணம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Categories

Tech |