Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் சிறுமியை படுகொலை செய்த போலீசார்….. போராட்டங்களை தடுக்க முடியாமல் திணறும் அரசு….!!!!

போராட்டத்தில் கலந்து கொள்ள   சென்ற 17 வயது சிறுமியை போலீசார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்.

இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் தாக்கியதில் தான் அந்த பெண்  உயிரிழந்ததாக கூறி நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹிஜாப்பை கழற்றி வீசியும், அதனை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்க  அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுவரை போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தப் போராட்டம் இப்ராகிம் ரைசிக்கு எதிராக திரும்பியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிராக பள்ளி,கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் ஆதரவாக களம் இறங்கி வருவதால் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் அதிபர் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம்  தேதி  தெஹ்ரானில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக  சென்ற  நிகா ஷகராமி என்ற 17 வயது சிறுமி  மாயமானார். இதனையடுத்து அந்த சிறுமியை  ஈரானிய பாதுகாப்பு படையினர் கொலை செய்துள்ளனர். பின்னர் சிறுமியின்  உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால்  அவரது உடலில் மூக்கு உடைக்கப்பட்டு மண்டை ஓடு சிதைந்து இருந்துள்ளது. பின்னர் அவரது இறுதிச் சடங்கில்  கூட்டம் கூடாமல் இருக்க அவரது உடலை திருடி ரகசியமாக புதைத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்  அதிகாரிகள் அந்த சிறுமியின்  உடலை கைப்பற்றி 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக புதைத்துள்ளனர் என்று  பிபிசி பாரசீக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |