பிரபல கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டை சேர்ந்த அவிஜித் ராய் என்பவர் மதச்சார்பின்மை ஆதரவு கருத்துக்களை கொண்ட அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அதிக அளவில் நிலவி வந்தது. மேலும் அவிஜித் ராய் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தார். கடந்து 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாக்காவில் நடந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்று விட்டு அவிஜித் ராய் தனது மனையுடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இஸ்லாமிய மத அடிப்படை வாத கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆயுதமேந்திய இஸ்லாமிய அடிபிப்படைவாத அமைப்பை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். அதில் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு குற்றவாளிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்கா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் போலீசார் மீது அமிலத்தை வீசினர். இதனையடுத்து குற்றவாளிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பித்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய குற்றவாளிகள் 2 பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.