பிரபல நாட்டில் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்நிலையில் நேற்று இதன் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்தி 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. இந்த பனிப்பொழிவு தொடர்ந்தால் விமான போக்குவரத்து சேவை மிகவும் பாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.