பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு மீது நேற்று முன்தினம் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.