பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில் வசித்து வந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபர் விம்பிலா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அங்கு இருந்த சிலர் போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.