பிரபல நாட்டு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் மிகவும் பிரபலமான கடைவீதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைவீதி பகுதியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதில் தொடர்புடைய 17 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக பல்கேரியாவில் 5 நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 3 பேர் மால்டோவியா நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், துருக்கி-பல்கோரியா எல்லை வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி பெறப்போவதாக கூறியுள்ளனர்.