பிரபல நாட்டில் பெண்கள் என்.ஜி.ஓ பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தலீபான்கள் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி பயில கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறியதாவது, “உலகம் முழுவதும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் தான் மையமாக இருக்கிறார்கள். ஆனால் தலீபான் அரசின் இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களின் பேரழிவுக்கு வழிவகுக்கும்” என கூறியுள்ளனர்.