பிரபல நாட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கெட்டெரிங் நகரில் கேரளாவை சேர்ந்த அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சு மற்றும் அவரது 2 குழந்தைகளும் வீட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்படட சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அசோக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.