பிரபல நாட்டில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரின் சாலையில் நேற்று எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி அதே பகுதியில் இருந்த பாலத்தின் மீது மோதி வெளியே வர முடியாமல் சிக்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை பத்திரமாக மீட்க முயன்றனர். ஆனால் திடீரென லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து அரசு அவசர சேவை செய்து தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி கூறியதாவது, “காயமடைந்தவர்களை அருகிலுள்ள தம்போ நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் கூரை சேதமடைந்ததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.