Categories
சினிமா

OMG: பிரபல பாடகர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…. கடைசி வீடியோ வைரல்…!!!!

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மின்சார கனவு படத்தில் ஸ்டாபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கேகே என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பாடகர் கே கே மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் நினைத்து பார்த்தேன்,காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல பாடல்களுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். இந்நிலையில் கொல்கத்தாவில் மேடையில் கேகே பாடிய கடைசி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |