பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்காட் ஹால் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 63 ஆகும். ரேஸர் ரேமன் என்ற பெயரில் மல்யுத்த உலகில் வலம் வந்த இவர் இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேம் பட்டம் வென்றுள்ளார். ஹால் வார இறுதியில் 3 மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் ஆதரவில் வைக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இவரது மறைவுக்கு WWE தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. ஸ்காட் ஹால் கடந்த 1984 ஆம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.