இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்-பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியாகிய திரைப்படம் பீஸ்ட் ஆகும். இந்த திரைப்படத்தில் செல்வராகவன், விடிவிகணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று இந்த படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை புதுச்சேரியில் தடைவிதிக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கு த.மு.மு.க மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்.