பிரிட்டன் முன்னாள் உளவுத்துறை அதிகாரி புதினின் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்
உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அதில் புதினின் முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிக அளவில் ஸ்டிராய்டு மாத்திரைகளை உட்கொள்வதால் தளர்ந்து, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் பிறழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் புதினுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரிட்டன் முன்னாள் உளவுத்துறை அதிகாரி புதினின் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.