Categories
உலக செய்திகள்

“OMG” …. பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறையுதா….? பிரபல நாடு ஆய்வில் வெளியான தகவல்….!!

பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியின் செயல்திறன்  குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சோதனை நடத்தி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் உலக மக்கள்  அனைவரும் கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, தீவிரத்தை குறைக தடுப்பூசி செலுத்தி  வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தை பைசர், மாடர்னா, ஸ்புட்னிக்-வி, ஆஸ்ட்ரா செனகா என பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது. அதனால் 3-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்துவதற்கு பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து  வருகிறது.

இந்த வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 3-வது தவணையாக பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியின் செயல்திறன்  குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் முடிவுகளில் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களில் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் 4 மாதங்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி வரை கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் 2.40 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 93 ஆயிரம் பேரின் மருத்துவ விபரங்கள் குறித்து புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் ஓமைக்ரான் வைரஸ் பரவிய காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 3-வது டோஸுக்கு பிறகு 2 மாதங்களில் 87 சதவீதம்  இருந்ததாகவும்  4-வது மாதத்தில் 66 சதவீதமாக குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் முதல் 2 மாதங்களில் 95 சதவீதம் இருந்ததாகவும் 4-வது மாதத்தில் 28 சதவீதமாக குறைந்தது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |