பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்த உயர் அதிகாரி உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபர் தீவில் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஜிதேந்திரா நரைன் . இவர் மீது 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அளித்துள்ளார். இதனால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கூறியதாவது. இவர் 1990-ஆம் ஆண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். தற்போது அந்தமா நீக்ரோ தீவின் தலைமை செயலாளராக இருந்தார். ஆனால் ஒரு பெண் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கும் போது பெரிய அளவில் தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் பெண்களின் கண்ணியம் தொடர்புடைய பிரச்சனைகளில் ஒழுங்கீனத்துடன் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அவர்கள் பதவி மற்றும் அந்தஸ்து ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பூஜ்ய சகிப்புத்தன்மையுடன் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும். தற்போது அவர் மீது எப். ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக தனியாக போலீசார் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ரிஷி என்ற மற்றொரு நபர் மீதும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அரசு வேலை தேடி சென்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு ஓட்டல் உரிமையாளர் ஒருவரின் மூலம் இரண்டு பேரையும் அந்த பெண் சந்தித்துள்ளார். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் என இரண்டு முறை இரவில் அந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இதனையடுத்து காரில் நரைன் வீட்டிற்கு அந்த பெண்ணை இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த பெண்ணிற்கு மதுபானம் வழங்கியுள்ளனர். ஆனால் அந்த பெண் குடிக்க மறுத்துள்ளார். இதனையடுத்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே கூறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் மிரட்டி உள்ளனர்.