மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஸஹ்ரா என்ற பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்திற்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் விடிய விடிய தேடியும் அவர் கிடைக்கவில்லை இந்த நிலையில் அவர் மாயமான அடுத்த நாள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே 16 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்துள்ளது.
இதை பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் மலைப்பாம்பு அவரை கொன்று விழுங்கி இருக்குமோ என சந்தேகப்பட்டு உள்ளனர் அதன் பின் அவர்கள் அந்த மலைப்பாம்பை அடித்துக் கொண்டு பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தபோது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து தோட்டத்தில் தனியாக இருந்த பெண்ணை மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கும் என நம்பப்படுகிறது. இது மிகவும் அரிதான செயல் என்றாலும் இந்தோனேசியாவில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல கடந்த 2017 மற்றும் 2018 இடையில் இப்படி இரண்டு பேரை பாம்புகள் விழுங்கி கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.